*எளிமையை விட*
*ஏற்றம் தரும்* *செல்வமில்லை..!*
*பொறுமையை விட*
*வெற்றி தரும் ஆயுதமில்லை..!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
*‘’துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல்...!"*
நீங்கள் அக்கறை கொண்ட ஒருவர் துன்பத்தில் துவளும்போது, உடனடியாக ஒரு தீர்வைக் கண்டு அவர்களை ஆறுதல் சொல்லுங்கள். உற்சாகப் படுத்துங்கள்.. .
சில வாய்ப்புகளில், வலியைப் போக்கக்கூடிய ஒரே மருந்து!, உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளே. அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நல்ல ஆலோசனை வழங்குங்கள்...
அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்...
ஒரு கிராமத்தில் ஒருவர் இரும்பு பொருட்கள் செய்து, அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவருக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தார்...
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் சோதனை காலம் வந்தது. அவர் செய்து கொண்டு இருந்த தொழில் நலிவடைந்தது.
இதனால்!, வருமானம் குறைந்து உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. இதனால் அவர் மனதில் விரக்தியும்,;கவலையும் குடிக்கொண்டது...
ஒருநாள் அவர் மாலை வேளையில் வானத்து விண்மீன்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் வலிந்தோடியது...
இதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினார். என்னங்க!, எதற்காக இப்படி கண்கலங்குறீர்கள். இந்தத் தொழில் இல்லையெனில் என்ன!?, அடுத்த வயலில் சென்று விறகு வெட்டி, அதனை, அடுத்து இருக்கின்ற கிராமத்தில் விற்றால் பணம் கிடைக்குமே!. அதனை வைத்து நாம் வாழலாமே என்றார்...
மனைவியின் ஆறுதல் அவருக்கு புது நம்பிக்கை, புது உற்சாகத்தை கொடுத்தது...
அடுத்த நாளே காட்டிற்கு சென்று விறகுகளை வெட்டி விற்று வந்தார். இந்த தொழிலால் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. இருந்தாலும் அவரதுது மனதில் சற்று சோகமும் இருந்தது...
மனைவி ஒருநாள் தன் கணவனிடம், என்னோட நகைய விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை மூலதனமாக வைத்து நாம் ஒரு விறகுக் கடை வைக்கலாம். கடை வைத்துவிட்டால் எந்த நேரமும் மக்கள் விறகு வாங்குவதற்காக வருவார்கள், நமக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என்றார்...
இதைக்கேட்டு அவர் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றார். விறகு வெட்டியாக இருந்தவர் விறகுக்கடை முதலாளி ஆனார். இதனால் வருமானம் பெருகியது. மகிச்சியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கயில், மீண்டும் அவரது வாழ்க்கையில் சோதனை ஆரம்பித்தது...
திடீரென்று ஒருநாள் அவரது விறகுகடையில் தீப்பிடித்து, அத்தனை மூலதனமும் கரிக் கட்டையாகி விட்டது. இதைக்கண்டு கதறி அழுதார். நண்பர்கள் பலரும் வந்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்...
மனைவி கணவனின் கண்ணீரை துடைத்து, இப்போது என்ன நடந்துவிட்டதென்று அழுகிறீர்கள், விறகு எரிந்து வீணாகவில்லையே, கரியாத்தானே ஆகியிருக்கிறது...
நாம் நாளையிலிருந்து கரி வியாபாரம் செய்வோம் என்றார், இதைக்கேட்ட பின் அவருக்கு தனது வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கை ஒளி தெரிந்தது...
*ஆறுதல் கூறவும், ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் ஒருவர் நம்முடன் இருந்தால் விண்மீனையும் எட்டிப் பிடித்துவிடலாம்...!*
*வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து மீள ஏதேனும் ஒரு வழி இருக்கும். அதனை சரியான தருணத்தில் பயன்படுத்தினால் உறுதியாக வாழ்வில் வெற்றி பெறலாம்...!!*
❤❤❤🙏🏻💜💜💜
இன்றைய சிந்தனை
..................................
‘’ நிறைவான வாழ்க்கை (Lifestyle)’’..
.....................................
நமது நாட்டில் பணக்காரர்கள் 10% என்றால் ஏழை மக்கள் 30% மீதம் 60% நடுத்தர வர்க்கத்தையேச் சேர்ந்தவர்கள். இப்போதைய சூழலில் கல்வி, மருத்துவம் என நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் வாழ்வதே பெரிய சவாலாகத் தான் உள்ளது.
காலையில் வேலைக்குப் போகலாம் எனப் பார்த்தால் திடீரென பஸ் கட்டணம் 2 மடங்கு ஆகி விட்டது,ஒரு வழியாகப் பட்ஜெட்டில் அதற்கும் சேர்த்து ஒதுக்கித் துண்டு விழாமல் பார்த்துக் கொள்கிறோம்.
வேலை முடிஞ்ச அசதியில் பொழுதுப்போக்கிற்காக டிவி போட்டால் எந்த சேனலும் எடுக்க மாட்டேங்குது. விசாரித்தால் சேனலுக்குக் கட்டணமாம், செட்டாப் பாக்ஸ்ஸாம்.
இப்படி இருப்பிடம், உடை , உணவு, கல்வி,மின்சாரம்,
மருத்துவம், அர்த்தம் இல்லாத பண்டிகைகள் என ஏகப்பட்ட இதரச் செலவுகள்..
அடிப்படை ஊதியம் வாங்குபவர்கள் குடும்பத்தை நடத்துவது என்பதே இப்போது மிகவும் பெரிய சவலாக இருக்கிறது.
எப்படியும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்.?
சரி.,எப்படி வாழ்வது.? இந்த இறுக்கமான சூழலிலும் நம்மை மன அழுத்தம் இல்லாமல் (‘’STRESS FREE’’) ஆக வைத்துக் கொள்ள வேண்டும்,
அதே நேரம் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்.
அதற்கான எனக்குத் தெரிந்த சில எளிய வழிமுறைகள்..
நாளை என்றால் காலாதாமதம் ஆகி விடும். இன்றே வாழ்ந்து விடுங்கள். இன்றைக்கு மட்டும் வாழுங்கள்.
நாளை வர உள்ள பிரச்சனைகள் குறித்து இன்றைக்குக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்...
உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்றையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாகப் பழக முயற்சி செய்யுங்கள்.
அடுத்து முக்கியமான ஒன்று,மற்றவர்களுடன் உங்களையும் குடும்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காதீங்க.
உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதை வைத்துச் சிக்கனமாக வாழுங்கள்.
அக்கம்பக்கத்தினரிடம் முடிந்த வரை அவர்களது ஊதியம் குறித்து உரையாட வேண்டாம்.
அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவழியுங்கள்.
உற்சாகமான தோற்றத்துடன் இருங்கள். பண்புடன் பழகுங்கள்.
புகழ்வதில் தாராளம் காட்டுங்கள். மற்றவர்களின் செயலிலும் குற்றம் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்களை விட இந்த உலகத்தில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என நம்புங்கள்.
புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்களைக் கொண்டாடுங்கள்.
ஒரு போதும் உங்களைத் தரம் குறைவாக உதாசீனப்படுத்த வேண்டாம்.
இந்த உலகில் ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டுக் கொண்டே போனால் அதற்கு முடிவே கிடையாது..
ஆம்.,நண்பர்களே..,
யார் அதிகம் சம்பாதிக்கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்..
இந்த உலகில் யார் அதிகம் மகிழ்ச்சி உடன் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் என்ற எண்ணத்தைக் கொண்டு இருங்கள்..
இப்படி வாழ்ந்தாலே போதும் நிறைவான வாழ்க்கை (Lifestyle) வாழ்ந்திடலாம்.......🌹🙏🏻❤
Follow this link to join my WhatsApp group: Open this link to join my WhatsApp Group &
Follow this link : https://chat.whatsapp.com/KT46AgfyOWC3aVZ81LouNr