படைச்செருக்கு
காஷ்மீர் இராணுவ நிலையத்தில் தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்ததில் முப்பதற்கும்மேற்பட்ட இராணுவத்தினர் இறப்பு. பத்துக்கும் மேற்பட்டோர்...மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர், என்ற செய்தி வந்ததோ இல்லையோ,? உடனே டில்லியில் இருந்த இராணுவத்தளபதிவிக்டரும் கர்னல் எழிலும் இராணுவ விமானத்தில் உடனே கிளம்பினர்.
விமானம் இராணுவ மருத்துவ வளாகத்தில் நின்றவுடன் விடு விடுவென உயிருக்கும் போராடும் வீரர்கள் இருக்கும் அவசரப் பிரிவுக்குச் சென்றனர்.
அங்கே ஒருவன் மட்டும் முனகும் சத்தம் கேட்டது.
அருகே செல்லவும்" எழில்" என்ற குரல் கேட்டதோ இல்லையோ ,"அன்பு" என்று அலறியவாறே அருகே சென்றான்.
தான் ஒரு இராணுவ அதிகாரி என்பதையும் மறந்து "அன்பு என்னடா ஆச்சு "?என்று அழுதவாறே கிட்டே சென்றான்.
" எழில் புதுசா இரண்டு தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கு பார்த்துக்கோ" என்றவன் ,மீதியை க்காதில் சொன்னான். அதற்குள்ளேயே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நண்பனை பார்த்தவரே சிரித்துக்கொண்டே 'ஜெய்ஹிந்த் ' என்றான், உயிர் பிரிந்தது.
" அன்பு "எனக் கதறிய எழிலின் தோளில் கை வைத்த விக்டர் வெளியே அழைத்து வந்தார்.
அவனின் சோகம் சற்றே கழியட்டும் என அமைதி காத்தவர் சிறிது நேரம் கழித்து ."எழில், வா நாம் அலுவலகம் போய் என்ன நடந்தது என விசாரிக்கலாம்.?"
"சாரி... சார் என்னை விட்டுடுங்க .நான் ,அன்பு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு,என் ராஜினாமாவை அனுப்புறேன். போதும் ...போதும் . தினம்தினம் போராடி ....போராடி ,உடம்பும் மனசும் ஒய்ந்துபோயிடுச்சு."
"என்னய்யா சொல்ற? நீ யார்? தீவிரவாதிகளை அடக்குவதற்காகச்,சிறப்பு பயிற்சி எடுத்துட்டு வந்து இருக்கிறவன். அஸ்ஸாம் ,பீகார் போய் அங்கே காட்டில் இருக்கிறயானை,முயல்களோட தீவிரவாதிகளையும் அடக்கியவன் .உன் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிங்க பயப்படுறாங்க .இப்போ குறைந்து கொண்டும் வராங்க."
"சார்... அதெல்லாம் சும்மா சார். அவங்களாவது குறையற தாவது. வெட்ட வெட்ட முளைக்கும் புல்லாட்டம் வளர்ந்துவிட்டே வர்றாங்க சார். அதில்,அப்பாவி மக்களும் நம்ம மாதிரி ஆளுங்களும் செத்துக்கிட்டே வருவதும் தான் சார்... நடக்குது."
"எழில் இப்போ சோகத்தில் நீ பேசுற .உன் கீழ் வேலை பார்க்கிறவங்க உனக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்காங்க."
"ஏன் நீயே என்ன சொன்னே? ஒரு தீவிரவாதியா வது , ஒரு நாளைக்கு ஒழித்தால் தான் நான் பிறந்ததற்கே பெருமை யென்று சொல்லுவே . அதனால் ,என் உயிர் போனாலும் பரவாயில்லைன்னு அப்படிப்பட்ட நீயா, இப்படிப் பேசுவது ?"
"ஆமாம் சார் ஆமாம். இப்போதெல்லாம் நல்லவர் எங்க சார் இருக்காங்க..தீயவர் கையில் நவீன ஆயுதங்கள் இருக்கு. அவர்களுக்கு உதவ ஆதிக்க வெறி பிடித்த ஒரு சில நாடுகள் இருக்கு .அதனாலே,'
' செருக்கோடு'
திரியறாங்க"
"தப்பு எழில் உன் முடிவு தப்பு. என்னைக்கும் தர்மம் தான் ஜெயிக்கும். அதர்மம் தோற்கும். இந்த போராட்டத்தில் உன் போன்றவர் தொடர்ந்து போராடினால் , நாம் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் ?சரி ....சரி வா. சீக்கிரம் போனால்தான், ஏதாவது தடையும் கிடைக்கும்."
உயர் அதிகாரியின் வார்த்தைக்கு அடிபணிந்த வனாய் அமைதியாய் உடன் சென்றான்.
"படுபாவிகள் எந்த வெடிகுண்டு வைத்தார்கள் என்று தெரியவில்லையே? சாதாரண வீரர்கள் இருக்கும் அறையே,முழுவதும் சிதைந்து இருக்கு .அதனாலே,இறந்தவர்கள் நிறைய இருப்பார்கள் போல இருக்கு"என விக்டர் சொல்லிக் கொண்டே, வர....
எழிலின்,
கோபம் ஏறிக்கொண்டே வந்தது. இப்போது மட்டும் அந்த தீவிரவாதிகள் கிடைத்தார்கள், அடித்தே கொன்று விடும் நிலையில் இருந்தான்.
"எழில் நேற்று மதியம் புறப்பட்டது. விடியப் போகுது. காலை வெளிச்சத்தில்மீண்டும் சோதனையை ஆரம்பிக்கலாம். நான் வருகிறேன். நீயும் போய் கொஞ்சம் ஓய்வு எடு." என்றவாறு விக்டர் சென்றார்.
தன் அலுவலக அறையில் வந்தமர்ந்த எழிலுக்கு அத்தனை வீரர்களும் நாட்டுப்பற்றோடு தானே, நாட்டுக்காக உயிரையும் உடலையும் தர,
சேர்ந்தார்கள் என்ற எண்ணம் தோன்ற தூக்கம் வர மறுத்தது.
அப்பொழுது அருகே வந்த ஆபீஸ் பாய் "சார் ...சார்" உங்களை பார்க்க யாரோ இரண்டு பேர் வந்திருக்காங்க. அவங்க உங்கள் நண்பர்களாம்.."
"யாரது வரச்சொல்" எனும்போதே,
"எழில் எப்படிடா இருக்க?"
என்று ஓடிவந்து கட்டிக் கொண்டனர் அலியும் ரபிக்கும்.
"டேய் அலி....ரபிக் இங்கே எங்கடா ?உங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு வருஷம் ஆகுது? சென்னையில் நாமெல்லாம் படித்தபோது பார்த்தது?"
"இது தான்டா எங்க மாமியார் ஊர். நாங்கஇரண்டு பேரும் குங்குமப்பூவும் ரோசாப்பூவும்வியாபாரம் பண்றோம்" என்றவாறே குளிருக்கு க்கைகளை க்
கோர்த்துக் கொண்டனர்.
"என்னடா குளிருதா டீ சாப்பிடுறீங்களா ?''பாய் "என அழைத்தான்.
"ஆபீஸ் பாய் உள்ளே சென்றானோஇல்லையோ? சட்டென எழுந்த ரபிக்கும் அலியும் எழிலின்இரு பக்கத்திலும் துப்பாக்கியை நீட்டியவாறு " என்ன எழில்பயந்து விட்டாயா?"
என்றார்கள்.
"பயமா எனக்கா? உங்களைப்போல ,எத்தனை பேரைப்பார்த்திருப்பேன்?"
"அதுதானே... நீ ...தான் எங்கள் கூட்டத்தையே அடியோடு அழிச்சிட்டு வர சூரனாச்சே. எங்க நோக்கம் நிறைவேற தடையாக இருக்கிற யாரையும் அழிப்போம். காஷ்மீரை தனிநாடா பிரிப்போம்."
"இதோ பார் ரிமோட். இதன்மூலம், மீதி இருக்கிற இராணுவத்தை அழிக்கப் போறோம்.அதற்கு முன்னால், உன்னை அழிக்க போறோம்."
"டேய் ...கெட்டதுக்கு துணை போறஉங்களுக்கே இவ்வளவு திமிர் இருக்கிற போது, எனக்கு இருக்காதா ?அங்கே பாரு ங்கஉங்ககுடும்பத்தை "என டிவியை போட ராணுவம் அவர்களை சுற்றி இருந்தது.
இருவரும் அசந்து போய் பார்க்க அந்த நேரத்தில் துப்பாக்கியை பறித்துக் கொண்டதோடுரபிக், அலி ரிமோட்டை குடுங்க .உங்களைப் பற்றிநேற்றே , அன்பு சொல்லிட்டான் .இந்திய ராணுவத்தை பற்றி உங்களுக்கு தெரியலே(படைச்செருக்கு).நான் நினைச்சா உங்களை இப்பவே சுட்டு விட முடியும் .ஆனால், உங்களை இப்படி இயக்கும் சக்தி எது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதுதான் உயிரோடு விடுறேன்.
" நம்ம ராணுவம் யாரிடமும்தோற்றது இல்லை..ஒரே இரவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் பார்த்தீர்களா? அதுதான் டா... இராணுவம்....நம் படைகளோட திறமை(படைச்செருக்கு) .எப்பவும் நேர்மைதான் வெல்லும்.
" கூடிய விரைவில் மற்ற தீவிரவாதிகளையும் கூண்டோட படித்து தொங்கவிடப் போறோம் பாருங்க. அரசு என்றால் சும்மா என்று நினைத்தீர்களா?"
"கொலைகாரப்பாவிகளா, போங்க....போய்...தூக்கிலே தொங்குங்க....
எழில், துப்பாக்கித் தோட்டாவாய் வெடித்தான்.
திருக்குறள் குறிப்பிடுகிறது
' " என்னை முன் நில்லன் மின்
தெவ்வீர் பலர் என்னை
முன்நின்று கல் நின் றவர்."
(பொருட்பால் - 78. படைச்செருக்கு, குறள்-771)