*இதயத்தில் நம்பிக்கை நிறையும் போது, கண்களுக்கு பாதை புலப்படும்...!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
*வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!*.
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான *டேல் கார்னகி,* ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர்.
அவரது *How to Win Friends and Influence People* என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மனிதர்களால் பின்பற்றப்பட்ட அவரது நம்பிக்கை மொழிகள் இங்கே…
வாழ்க்கையில் உங்களுக்கு போராடிக்கிறதா? ஒரு வேலையை நீங்கள் நம்பி, அதற்காக உங்கள் இதயத்தைத் தந்துவிடுங்கள். அதற்காக வாழுங்கள். அதற்காக உயிர்விடுங்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியை அறுவடை செய்வீர்கள்.
உங்களைத் தாக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்களைப் புகழ்ந்துரைக்கும் நண்பர்களைப் பார்த்து பயப்படுங்கள்.
செயல்கள் வார்த்தைகளைவிட அதிகம் பேசுபவை.
உங்களால் விவாதத்தில் வெற்றிபெறமுடியாது. உங்களால் முடியாது ஏனெனில், நீங்கள் அதில் தோற்றால் வெல்லலாம். நீங்கள் வென்றால் தோற்கலாம்.
அங்கீகாரத்துக்கும் புகழ்ச்சிக்கும் என்ன வேறுபாடு? அது எளிதானது. ஒன்று நேர்மையானது. அடுத்தது நேர்மையற்றது. ஒன்று இதயத்தில் இருந்து வருகிறது. மற்றது வாயில் இருந்து வருகிறது. ஒன்று சுயநலமற்றது. மற்றது சுயநலமானது. ஒன்று பிரபஞ்சத்தால் விரும்பப்படுவது. மற்றது கண்டனத்திற்குரியது.
வெற்றிகரமான மனிதன் தன் தவறுகளில் இருந்து அனுபவம் பெறுகிறான் மீண்டும் வேறு வழிகளில் முயற்சி செய்கிறான்.
ஒரு விவாதத்தில் சிறந்தவற்றைப் பெற அதை தவிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
இன்று என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையே நிச்சயமானது. அந்த நாளை முழுமையாக பயன்படுத்துங்கள். எதிலாவது ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். முழு வாழ்க்கையும் ஒரு வாய்ப்புதான். ஒரு காரியத்தைச் செய்வதற்கான எண்ணமும் துணிச்சலும் கொண்டிருந்தால், அந்த மனிதன் நெடுதூரம் செல்வான்.
முதலில் கடினமான வேலைகளைச் செய்யுங்கள். எளிதான வேலைகள் அதுவே தங்களைப் பார்த்துக்கொள்ளும்.
பகிர்வு - தகவல் உலா