*#மனசாட்சி_நம்_உண்மையான_முகம்*...
*"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள்...."மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா...?" இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதைக் காண்கிறோம்...*
*“அது சரியில்லை என்று என் மனதிற்குத் தெரியும்,” அல்லது “நீங்க சொல்வதை என்னால் செய்ய முடியாது...!*
*அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக் கிட்டே இருக்கின்றது” என்று நீங்கள் எப்போதாவது கூறி இருக்கிறீர்களா...?*
*அப்படிச் சொல்லி இருந்தால் அதுதான் உங்கள் மனசாட்சியின் “குரல்;”*
*இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கின்ற அல்லது உங்களை குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வு...*
*மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும்...*
*நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம்...*
*அந்த எச்சரிப்புக்குச் செவிசாய்ப்பது தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்க்க மட்டும் அல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது...*
*அமெரிக்காவின் ஜனதிபதியாவதற்கு முன்பு ஆபிராகம் லிங்கன் அவர்கள் வழக்கறிஞராகத் திகழ்ந்தார்...*
*அவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதற்குக் காரணமே அவரது நேர்மைதான்...*
*உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்...*
*இதற்கு அவரிடம் காரணம் கேட்டதற்கு!,’*
*''உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்’’ என்றார்...*
*மனசாட்சி - நம் உண்மையான முகம்...! நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய உதவும்.*
*உங்களுடைய மனசாட்சி கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்து விடாதீர்கள்.*
*நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டும் என்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும். நாம் எல்லோருக்கும் மிகப்பெரிய நீதிபதி நம் மனசாட்சிதானே.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
*#வாழ்த்துக்கள்.*
*#வாழ்க_வளமுடன்.*
*தினம் ஒரு குட்டிக்கதை* .
* சிந்தனை கதை...*
*உண்மையான அன்பு எது..??*
ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.
"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.
குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.
குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.
ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார். அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.
குரு, அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார்.
பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால்., அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது
, ஆனால்., இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில்,
*அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது* என்று
குரு சீடனுக்கு புரிய வைத்தார்.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LITNVZSnGIwBL3xjPd86vC