🌺🌺🌺❤💐💐💐
இன்றைய சிந்தனை
..................................
'' மதிப்பெண் மட்டும் கல்வி இல்லை''..
..................................
கல்வி’’ என்பது அழியாத செல்வம். ‘’கல்வி’’ கற்பதன் முலம் நாம் புதுப்புது விஞ்ஞானச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.
பலப்பல பட்டம் பெறுவது மட்டும் கல்வி அல்ல... நம் அறிவைப் பெருக்குவதற்கும், வாழ்க்கை நிலையையும் உயர்த்துவதோடு பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது கல்வி ஒன்றே..
மனிதனின் மிகப் பெரிய சொத்து கல்வி. கற்ற மனிதனே முழுமையான மனிதனாவான்.
கல்வி நமக்கு நல்வழி காட்டும். கல்வி கற்றால் வாழ்க்கை சிறக்கும்.. இதுவே வாழ்க்கையின் நியதி..
கல்வி கற்றப் பின்னே வேலை பெற்றான். சுற்றம் சூழ வாழக் கற்றான். நல்ல பழக்கம் கல்வி கொடுக்கும். இவை அனைத்தும் கல்வி கற்றப் பின்னே நடக்கிறது.
படித்தால் சுயமாய் சிந்திக்க முடியும். நன்மை எது தீமை எது எனத் தெரியப்படுத்தும்.
அமெரிக்காவில் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகனுக்குப் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் புத்தகம் வாங்குவதற்கு உண்டான பணம் இல்லை.
அவன் தந்தையோ மிகுந்த ஏழை. அவரால் எப்படி இதற்கு எல்லாம் செலவு செய்ய முடியும்.?
அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரைக் கெஞ்சிக் கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.
ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டான்.
அன்று பெய்த மழையில் அப்புத்தகம் நனைந்து விட்டது. ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?’’ என்று தவித்தான்..
பின் ‘‘ஐயோ! இந்தப் புத்தகம் எனது அஜாக்கிரதையால் நனைந்து விட்டது. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்.’’ என்று கேட்டுக் கொண்டான்.
ஆனால் அவரோ ‘‘அதெல்லாம் முடியாது. இந்தப் புத்தகத்திற்கான விலையை நீ தர வேண்டும்’’என்றார். ‘ஐயா! என்னிடம் பணம் இல்லை’’ என்றான்.
அப்படியானால் நீ என் வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்றார்..
‘சரி! அப்படியே செய்கிறேன். ஆனால் தாங்கள் இந்தப் புத்தகத்தை எனக்கே தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு வேலையைச் செய்து முடித்து விட்டு அப்புத்தகத்தைப் பெற்றுச் சென்றான்.
இப்படிப் புத்தகத்தை வாங்கிப் படித்த அச்சிறுவன் தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார்..
ஆம்! அடிமைத்தளையை அறுத்து எறிந்த ஆபிரகாம்லிங்கன் தான் அந்த சிறுவன்.. அவனது நுாலறிவு அவனை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருந்தது..
ஆம்.,நண்பர்களே..,
உங்கள் குழந்தைகள் அவர்கள் விரும்பிய பாடம் படிக்கட்டும். அவர்கள் விருப்பபடி படிக்கட்டும் எனப் பெற்றோர்கள் முடிவெடுக்கும் உரிமையைத் தர வேண்டும்.
படிப்பு என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.
மதிப்பெண் மட்டும் கல்வி இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
படித்தவர் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் பல பேர் நன்கு படித்தவர் இல்லை.
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர எதிரியாக இருக்காதீர்கள்..
மாணவர்களின் வசந்த காலத்தை இறந்த காலமாய் ஆக்கி விடாதீர்கள்.🌺🙏🏻🌹
Follow this link to join my WhatsApp group: Open this link to join my WhatsApp Group &
Follow this link : https://chat.whatsapp.com/KT46AgfyOWC3aVZ81LouNr