நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லையேல் விட்டு விடுங்கள்
* 🙏🙏🙏*
*''எதிர்பார்ப்பும், அன்பும்...!"*
சாதாரண மனித குணமே பிறர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது தான்...
நம் வீடுகளில் ஏற்படுகின்ற ஒவ்வொரு சிறு உரசல்களையும் தகராறுகளையும் சண்டை சச்சரவுகளையும் உற்று நோக்கி ஆராய்ந்தால் அதில் பின்னணியாக இருப்பது இந்த எதிர்பார்ப்புத் தான்...
ஒருவர் பிறரிடம் ஒன்றை எதிர்பார்க்கின்ற போது, அந்த ஒன்றை நாம் பிறருக்குத் தருகிறோமா...? என்பதை யோசிக்க வேண்டும்...
ஆனால் நாமோ!, “பிறர் தான் நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், எல்லாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்று விரும்புகிறோமே தவிர, “நாமும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும், அப்படி அவர்களும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள்” என்ற எண்ணமே நம்முள் எழுவதில்லை...
நமது எல்லாச் செயல்களிலுமே எதிர்பார்ப்பு அடிப்படையாக இல்லாமல் அன்பு அடிப்படையாக அமைந்து விட்டால் அது இரண்டு மடங்காக நம்மிடம் திரும்பி வரும். ஆம்! இது உண்மை!
எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்...? அதுவும் தீவிரமாக!;
அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. அதன் பெயர் 'அன்பு'.
எதிர்பார்ப்புகளால் மட்டுமே அன்பு வலுப்பெறும்...
அன்பு தான் உலகின் பொதுமொழி. நமக்குள் இருப்பது அன்பு. நாம் தேடுவதும் அன்பைத் தான். நாம் கொடுக்க விரும்புவதும் பெற விரும்புவதும் அன்பையே! இந்த அன்பு முழுமையாக வெளிப்படும் போது அது ஆவலுடன் ஏற்கப்படுகிறது...!
அந்த முழுமையான அன்பில் எதிர்பார்ப்பும் இல்லை, ஆகவே ஏமாற்றமும் இல்லை. இப்படி நம்மை நாம் அன்பானவர்களாக மாற்றிக் கொண்டு அன்பின் அடிப்படையில் மற்றவர்களுடன் பழகத் தொடங்கினால், அன்பை விரும்பும் அவர்களும் கிடைக்கின்ற அன்பை ஏற்றுக் கொண்டு அதையே திருப்பி நமக்குத் தர முன் வருவார்கள்...!!
இங்கு எதிர்பார்க்கப்படுவது அன்பு. வழங்கப்படுவதும் அன்பு. எனவே!, இங்கு ஏமாற்றம் எழுவதில்லை...!!!
👉 *Join Whatsapp Groups*
🙏 *Please share with your Friends*
🤝 *Thank you*🌹🍁🌷Open this link to join my WhatsApp Group: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KT46AgfyOWC3aVZ81LouNr