ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ...
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
*🙏இன்றைய சிந்தனை🙏*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சந்தோஷம்
சந்தோஷத்தின் போஷாக்கு ஒருவரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
உண்மையாக சந்தோஷத்துடன் இருப்பது என்பது, சந்தோஷத்திற்காக வெளித் தூண்டுதலை சார்ந்திருக்காமல், உள்ளிருக்கும் சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பதில் உள்ளது. உள்ளார்ந்த சந்தோஷத்தின் தொடர்பில் இருக்கின்ற ஒருவரால், அவருடைய வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடிகின்றது. சந்தோஷம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது - நாம் சந்தோஷமாக இருக்கும் போது, உடலை பாதிக்கின்ற நோய்களிலிருந்தும் கூட நாம் விடுபட்டு இருக்கின்றோம்.
செயல்முறை:
நான் என்னுடைய உள்ளார்ந்த சந்தோஷத்தின் நிலையை பேணிக் காக்கும் போது, என்னால் அனைத்திலும் உள்ள அழகை ரசிக்க முடிகின்றது. இம்மன நிலையால் என்னுடைய மனம், உடல் மற்றும் உறவுகள் ஆரோக்கியமாக உள்ளன. என்னால் நான் செய்கின்ற அனைத்தையும் ரசிக்க முடிவதோடு தொடர்ந்து முன்னேற்றத்தையும் அனுபவம் செய்ய முடிகின்றது.*
🌻
*தினம் ஒரு குட்டிக்கதை* .
ஒரு ஆசிரியையின் கனவு...
ஒரு நிமிடக் கதை..
"பசங்களா..
ஒரு சின்ன கற்பனை..
அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..?
வரிசையா சொல்லுங்க பாப்போம்..!"
"மிஸ்.. நான் வந்து ரோஸ்...!"
"வாவ்... ஆனா ஏன்..?"
"அப்போ தான் வாசனையா இருப்பேன்..!"
"ஓ... குட்
அடுத்து"
"மிஸ்... நான் மயில்..!"
"ஹாஹா.. ஏன்..?"
"அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல..
எனக்கும் புடிக்கும்.. அதனால..!"
"செம...
அடுத்து..?"
"மிஸ்... நான் பட்டாம்பூச்சி
ஏன்னா..
அதுக்கு றெக்க இருக்கும்...!"
"செம... செம...
அடுத்து"
"மிஸ்... நான் மான்
ஏன்னா..
அது துள்ளி துள்ளி ஓடும்..!"
"மிஸ்...
நான் ட்ரீ..
ஏன்னா..
அதுல தான் நெறைய பறவைங்க வந்து தங்கும்..!"
"ஹே.. வாவ்..
அடுத்து"
"மிஸ்... நான் பாரதி..
பெரிய மீசை வெச்சிப்பேன்.."
"ஹாஹா..
அடுத்து"
"மிஸ்... நான் முயல்..
ஏன்னா..
அது உங்களுக்கு பிடிக்கும்ல.."
"ம்...
அடுத்து"
"எங்களையே கேட்டுட்டிருக்கீங்க
இப்போ நீங்க சொல்லுங்க..."
"நானா...?
நான் வந்து ஒரு சாக்பீஸா பொறக்கனும்"
அறைமுழுக்க பெரும் சிரிப்பு
"ஏன் மிஸ்..?
"ஏன்னா..
வெறும் கரும்பலகை எதுவும் கத்து தராதே"
"நீ கத்துக்க தன்னையே இழக்குறது
சாக்பீஸ் தானே..?"
"ஒரு எழுத்து கத்துக்கொடுத்தாலும் போதும்
அதுக்காக தேயற வாழ்க்கை எவ்வளவு அழகு தெரியுமா...? "
அறை முழுக்க பிரமிப்பின் கண்விரிப்போடு கைத்தட்டல்..
அவசர அவசரமாக விரலோடு உயர்ந்தது ஒரு குரல்..
"அப்போ நான் குட்டி சாக்பீஸ்.." என்று..!
வெடித்த சத்தத்தோடு பின் எழுந்தது பல குரல்களில்..
"நாங்களும் குட்டி சாக்பீஸ்...!
நாங்களும் குட்டி சாக்பீஸ்...!
சத்தம் காதடைக்க, எதேச்சையாய்
கையிலிருந்து விழுந்து குட்டியானது
ஒரு முழு நீள சாக்பீஸ்..!
#சாக்பீஸாக_தேய்கின்ற_ஆசிரியர்களுக்கு_நன்றிகள்_கோடி..!!
👉 👉 *Join Whatsapp Groups*
🙏 *Please share with your Friends*
🤝 *Thank you*🌹🍁🌷
Open this link to join my WhatsApp Group: Follow this link to join myWhatsAppGroup 2 :https://chat.whatsapp.com/LkzCGLYcD5G52TMqkdJni4